Home கல்வி கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரியில் உலகத் தரக்கட்டுப்பாடு (ISO 9001:2015) பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்…

கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரியில் உலகத் தரக்கட்டுப்பாடு (ISO 9001:2015) பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்…

by ஆசிரியர்

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலகத் தரக்கட்டுப்பாட்டின் புதிய பதிப்பான 9001: 2015 (ISO 9001 :2015) பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் இன்று (19/04/2017) இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சுமையா துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியை தலைமை ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் (Chief Consultant / Trainer) S.S பிள்ளை,  ஆலோசகர் (Consultant ) சாஹீல் ஹமீது மற்றும் ஆலோசகர் (Consultant) P கலைச் செல்வன் ஆகியோர் முன்னிருந்து நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தரக்கட்டுப்பாட்டின் முந்தைய பதிப்பான 9001:2008ல் இருந்து புதிய பதிப்பான 9001:2015 மாற்றங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கங்களும் அதன் செயல்படுத்தும் முறையும் பங்கேற்றவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.  புதிய தரக்பட்டுபாடு 9001:2015 ஆபத்து/முன்னெச்சரிக்கை அடிப்படையிலான அணுகுமுறையை (Risk Based Approach) கொண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!