கீழக்கரை வடக்குத் தெரு அல் மத்ரஸத்துல் முஹம்மதியாவில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு..

கீழக்கரை வடக்குத் தெரு நாசா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்வி பயிலகம் அல் மதரஸத்துல் முஹம்மதியா, இதில் மாணவர்கள் பல மாணவர்கள் மார்க்க கல்வி பயின்று வருகிறார்கள்.

இந்த பயிலகத்தின் சிறப்பம்சம் ஒவ்வொரு மாதமும் சிறந்த மாணவர்களை கல்வியறிவு அடிப்படையில் மட்டுமல்லாமல் அவர்களுடைய ஈடுபாடு, ஒழுக்கம், நேரம் கடைபிடித்தல், தவறாமல் வகுப்புக்கு வரும் மாணவர்கள், சிறந்த மாணவர் என்று பல வகையில் அடையாளம் கண்டு பெற்றோர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சயாக நேற்று (13-04-2017) அன்று பெற்றோர்கள் முன்னிலையில் பல மாணவர்களுக்கு பல பிரிவில் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.  இந்நிமழ்ச்சயில் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை நிர்வாகிகள், நாசா அறக்கட்டளை நிர்வாகிகள், முகைதீனியா பள்ளி கல்விக் குழு மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.