Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கருவேல மர ஒழிப்பில் பங்கெடுத்த ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவச் செல்வங்கள்…

கருவேல மர ஒழிப்பில் பங்கெடுத்த ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவச் செல்வங்கள்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கருவேலமர ஒழிப்பிற்கான விழிப்புணர்வு கூட்டம் ஏப்ரல்10ம் தேதி திங்கள் கிழமையன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஜோ.செந்தில்நாதன் தலைமையில் நடந்தது.  இக்கூட்டத்தில் குறைந்தது  10 கருவேல மரக் கன்றுகளை வேருடன் அகற்றி    வரும் மாணவர்களுக்கு பரிசு தருவதாகவும் ஊக்கப்படுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக 57 மாணவர்கள் தங்களின் பஅங்கஉக்கு 600 கருவேல மரக்கன்றுகளை அகற்றி வந்தனர். அம்மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையாசிரியர் கி.தமிழரசி, கருவேல மரங்களினால் உண்டாகும் பாதிப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, கருவேல மரக்கன்றுகளை அகற்றி வந்த மாணவர்களை பாராட்டினார். மாணவர்களுக்கு பரிசாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

பரிசினை பள்ளியின் தலைமை ஆசிரியர் கி.தமிழரசி, பட்டதாரி ஆசிரியர்கள் மா.கீதா பொன்மலர், பா.பானுமதி மற்றும் இடைநிலை ஆசிரியர் நா.சீனி இபுராகிம் ஆகியோர் வழங்கினர். பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஜோ.செந்தில்நாதன் பரிசுக்கான தொகையினை வழங்கி விழாவினை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியின் இறுதியாக பட்டதாரி ஆசிரியர் மா.கீதா பொன்மலர் நன்றியுரை ஆற்றினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!