பொது சேவையை தண்டனையாக வழங்கும் அமீரக போக்குவரத்து துறை….

அமீரகத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறி பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு சிறைதண்டனைக்கு பதிலாக பொது சேவையை (Community Service) தண்டனையாக வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளது.

பொது மக்களின் உயிர்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விதிமுறையை மீறிய வாகன ஓட்டிக்கு 3 மாதங்களுக்கு பூங்கா ,தெருக்கள் மற்றும் கடற்கரை போன்ற இடங்களை சுத்தப்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து குற்றவியல் நீதி மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அவ்வாறு தண்டணை வழங்கப்படும் குற்றவாளிகள் வழங்கப்படும் தண்டனையை நிறைவற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யும் வகையில் வழக்கறிஞர்கள் குற்றவாளிகளை மேற்பார்வையிட்டு மாத அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளி வழங்கப்பட்ட தண்டனையை மறுக்கும் பட்சத்தில் அந்த குற்றவாளியை 3 மாதம் சிறையில் அடைக்க நீதி மன்றத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இதுபோன்ற வழங்கப்படும் தண்டனை விபரங்கள் 2016 ஆண்டின் தேசிய சட்ட பிரிவு எண் 4 ல் இடம் பெற்றுள்ளதாக நீதி துறை அறிவித்துள்ளது.

இந்த்சட்டத்தின் நோக்கம் குற்றம் புரிந்தவர்களிடம் சேவை மனபான்மையையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்துவதாகும். மேலும் இதுபோன்ற கடுமையான சட்டங்கள் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், குற்றத்தை கட்டுப்படுத்தவும் ஏதுவாக அமையும் என்றால் மிகையாகது.

தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்களை தடுக்க முடியும் என்று கேள்விபட்டிருப்போம், ஆனால் சில நேரங்களில் மன ரீதியான தண்டனைகள பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என மன நல ஆய்வாலர்கள் குறிப்பிடுகிறார்கள்…