கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியீடு – மீறுவோர் மீது அபராதத்துடன் சட்ட நடவடிக்கை

கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி நபர் வீடுகள், உணவு விடுதிகள், சிற்றுண்டி சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மையை மேம்படுத்தி கீழக்கரை நகராட்சியை முன் மாதிரி நகராட்சியாக மாற்றிட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் கெற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகராட்சி திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ன் படியும், தமிழ் நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 சட்டப் பிரிவுகள் 153, 156, 157, 160 மற்றும் 161 ன் பிரகாரமும் நச்சுக் கழிவுகளையும், அழுகிய கழிவுகளையும், மலக் கழிவுகளையும் சாலைகளில் தூக்கி வீசுபவர்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீன், கோழி, ஆடு, மாடு போன்ற இறைச்சி கடை நடத்துபவர்கள் அதன் கழிவுகளை திறந்த வெளியில் வீசக் கூடாது, பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் கைவிட வேண்டும், கட்டிட இடிபாடுகளை எக்காரணத்தை கொண்டும் ஒப்பந்ததாரர்கள் சாலைகளிலோ, தெருக்களிலோ கொட்ட கூடாது.

நகராட்சி எல்லைக்குள்பிளாஸ்டிக், ரப்பர், டயர் உள்ளிட்ட திடக் கழிவுகளை எரிக்க கூடாது, திருமண நிகழ்ச்சிகளின் போது குப்பைகளை முறையாக கையாள வேண்டும், செப்டிக் டேங்க் கழிவுகளை கழிவு நீர் வாய்க்காளிலோ அல்லது தெருக்களிலோ கொட்டக் கூடாது என்பது உள்ளிட்ட 16 அம்ச நிபந்தனைகளை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..