படிக்க ‘தகுதியில்லை’ என கைவிடப்பட்ட மாணவரா நீங்கள்… அட்மிஷன் தர ‘நாங்க இருக்கோம்’… – அசத்தும் கீழக்கரை பள்ளிக்கூடம்

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், ஏழை எளிய பெற்றோர்களின் மன குமுறல்களை களையும் முகமாகவும் பல்வேறு அசத்தலான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அந்த அறிவிப்பின் படி கீழக்கரையில் பிற பள்ளிகளில் படிக்க ‘தகுதியில்லை’ என கைவிடப்பட்ட மாணவ மாணவிகளுக்கும், அரசு தேர்வுகளை எழுத லாயக்கில்லை என ஒதுக்கப்பட்ட மாணவ செல்வங்களுக்கும், இப்பள்ளியில் அட்மிஷன் தரப்படுவதோடு அவர்களுக்கு சிறப்பாக கல்வியளித்து வெற்றி கனியை பறிக்க வைக்கும் உன்னத முயற்சியிலும் ஆசிரிய பெருந்தகைகள் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல் வேறு எந்த பள்ளியில் அட்மிஷன் தர மறுக்கப்பட்டாலும் இந்த பள்ளியில் மாணவ மாணவிகள் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளியில் அரசின் இலவச கல்வி திட்டத்தின் படி LKG வகுப்புகளில் சேரும் மாணாக்கர்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றாக படிக்கும், புத்திசாலி மாணவர்களை தேடி பிடித்து அவர்களுக்கு மாத்திரம் அட்மிஷன் தரும் பள்ளிகளுக்கு மத்தியில் படிக்கவே தகுதியில்லை என ஓரங்கட்டப்படும் மாணவர்களுக்கு ஊக்கம் தந்து அவர்களுக்கு கல்வியளிக்கும் தீனியா கல்வி நிலையத்திற்கு கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..