கஸ்டம்ஸ் ரோடு பகுதி மக்களின் கஷ்டத்தை போக்கிய நகராட்சிக்கு நன்றி

கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் சாலையின் நடுவே போடப்பட்ட கழிவுநீர் ஜங்க்சன் மூடி உடைந்து 3 மாதங்களுக்கும் மேலாக புதிய மூடி போடப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகளும், பள்ளி சிறுவர்களும், முதியவர்களும் பலமுறை இந்த பள்ளத்தில் விழுந்து அடிபட்டு செல்வது தொடர்கதையாகி வந்தது.

இது குறித்து நம் கீழை நியூஸ் வலை தளம் சார்பாக கடந்த வாரம் ”கீழக்கரையில் கஷ்டமப்பா.. கஸ்டம்ஸ் ரோட்டில் ‘உலகத் தரத்துடன்’ போடப்பட்ட ஜங்க்சன் மூடி உடைந்ததால் விபத்தில் சிக்கும் அப்பாவிகள் – நகராட்சியில் மூடி ரெடியா ..?” என்று தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். பல்வேறு செய்தி ஊடகங்களிலும் இது சம்பந்தமாக செய்தி வெளியிடப்பட்டது.

கீழக்கரையில் கஷ்டமப்பா.. கஸ்டம்ஸ் ரோட்டில் ‘உலகத் தரத்துடன்’ போடப்பட்ட ஜங்க்சன் மூடி உடைந்ததால் விபத்தில் சிக்கும் அப்பாவிகள் – நகராட்சியில் மூடி ரெடியா ..?

இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று இரவு கஸ்டம்ஸ் ரோட்டில் உடைந்த தரமற்ற மூடிக்கு பதிலாக புதிய தரமான மூடி நகராட்சி நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பிரச்சனையை சுட்டி காட்டிய உடன் விரைந்து தரமான மூடி அமைத்து தந்ததோடு மட்டுமல்லாமல் கீழக்கரை நகரை முன் மாதிரி நகராக மாற்ற உறுதுணையாக இருக்கும் நகராட்சி ஆணையாளர் சந்திர சேகரின் பணிகள் மென்மேலும் சிறக்க கீழை நியூஸ் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..