சிங்க கொடியுடன் பல நாடுகளுக்கு கப்பலோட்டிய ‘கீழை மன்னர்கள்’ வாழ்ந்த வீடுகளில் குப்பை மேடுகளா..? – அதிர்ச்சியில் உறைந்த மலேசிய வரலாற்று ஆய்வாளர்கள்

கீழக்கரை நகருக்கு மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவையினர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நகரின் பழமை வாய்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அதன் தொன்மையை அறிந்து வியந்து குறிப்பெடுத்து வருகின்றனர்.

வள்ளல் சீதக்காதியின் முன்னோர் வீட்டினை பார்வையிட்ட மலேசிய இந்திய முஸ்லீம் பேரவையினர் அங்கு மக்கள் கொட்டும் குப்பைகளை பார்த்து மன வருத்தத்தில் ஆழ்ந்தனர். மேலும் பெரிய தம்பி மரைக்காவின் வீடு இருக்கும் நிலையையும் கண்டு வருந்தினர்.

உலகத்தின் பல மூலைகளுக்கும் கடல் வழி மார்க்கமாக சென்று வணிகம் செய்த முன்னோர்களின் இல்லங்களும், சிங்க கொடியுடன் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் பல நாடுகளுக்கும் கப்பல்களை செலுத்திய கீழை மன்னர்களின் வீடுகளும் கேட்க நாதியற்று கை விடப்பட்ட நிலையில் குப்பை மேடுகளாக உருவெடுத்து இருப்பதை கண்டு மனம் வெதும்பினர்.

அதே போல் பாரம்பரியத்தை பல திக்கும் தந்த மக்களின் இன்றைய சுகாதார நிலையையும், வரலாறு மறந்து இருக்கும் வரலாற்று சாதனையாளர்களின் வாரிசுகளின் நிலையை கண்டும் வருந்தினர். கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை தூய்மையாக பராமரிக்க கோரிக்கை விடுத்தனர்.

மேலும் மாபர்கரையின் வரலாற்றை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதற்கான பணிகளை விரைவில் துவங்கவும் அதற்கு உதவ தயாராக இருப்பதாகவும் வரலாற்று ஆராச்சியாளர் அபுசாலிஹிடம் (பெர்மிம்) தாய்-சபையினர் தெரிவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..