கீழக்கரை மதரஸாக்களில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக ஆய்வு

கல்வி நகரமான கீழக்கரையில் ஏராளமான கல்வி நிலையங்களும், அரபி மதரஸாக்களும் உள்ளன. இதில் அரபி மதரஸா கல்வி கூடங்களில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த ஆய்வுகளின் போது பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஒழுக்கம், நன்னடத்தை, வருகை பதிவு, பள்ளியின் சுகாதாரம், மாணவர்களின் ஆரோக்கியம், தொழுகை, சுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்நிலையில் இன்று 25.03.17 கீழக்கரை MP தெருவில் செயல்படும் அல் மத்ரஸத்துல் அரபிய்யதுஜ் ஜெய்னபிய்யா பள்ளிக்கு இராமநாதபுரம் மாவட்டம் ஜமாத்துல் உலமா சபையின் மக்தப் ஆய்வாளர் மௌலவி அல்ஹாஜ் அப்ஸலுல் உலமா A.M.மீரான் அன்ஸாரி ஜமாலி பைய்யாஜி வருகை தந்து ஆய்வு நடத்தி பள்ளி நிர்வாகத்தையும் , பேராசிரியர்களையும் பாராட்டி சென்றார்.