கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு கட்டிட வடிவமைப்பின் தொழில்நுட்பங்களின் சிறப்பு பற்றிய ஒருநாள் கருத்தரங்கம்..

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கட்டிடக்கலை துறை சார்பாக இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு கட்டிட வடிவமைப்பின் தொழில்நுட்பங்களின் சிறப்பு பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹுபர் தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர்.அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வரும் கட்டிடக்கலை துறைத் தலைவியுமான முனைவர். அழகிய மீனாள் அனைவரையும் வரவேற்றார்.

​சிறப்பு விருந்தினராக சென்னை VIT பல்கலைக்கழக கட்டிட கலைத் துறை பேராசிரியர் பாக்யராஜ் கலந்துகொண்டு, ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.  அவர் பேசுகையில் கட்டிடக்கலைத்துறை விவசாயத்திற்கு உதவக்கூடிய தண்ணீரை சேமிப்பதற்கு பல அணைகளை கட்டுவதற்கும் உதவுகிறது. அடுத்து இருப்பிடம் என்பது கற்காலம் முதல் இக்காலம் வரை சுற்றுச் சூழல் மற்றும் தட்ப வெட்ப நிலைக்கேற்றவாறு கட்டிடக் கலைத் துறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிக்கொண்டு வருகின்றனர். எனவே கட்டிடக்கலை துறை மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் தட்பவெட்ப நிலைகள் தாங்கும் வண்ணம் கட்டிடங்களை வடிவமைப்பதற்கு அறிவுரை வழங்கினார்.

​பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் தொழில்நுட்ப மாதிரிகளை வடிவமைத்திருந்தனர். சிறப்பான வடிவமைப்பிற்கு சிறப்பு விருந்தினர் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கினார். கட்டிடக்கலைத் துறை துணைப் பேராசிரியர் நிறைகுலசேகரன் நன்றியுரை வழங்கினார்.

​விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிடக்கலை துறை பேராசிரியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..