தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இஸ்லாமியா துவக்க பள்ளியில் சிறுவர்களின் அறிவியல் படைப்பு..

இன்று 28.02.2017 ‘தேசிய அறிவியல் தினம்’ இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் அறிவியல் தினத்தை முன்னிட்டு பல அரசு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் அது சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று கீழக்கரை இஸ்லாமியா துவக்கப்பள்ளியில் சின்னஞ்சிறிய மாணவ, மாணவிகள் கை வண்ணத்தில் உருவாக்கிய அறிவியல் படைப்புகள் கண்காட்சியாக அனைவரின் பார்வைக்கும்  வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியினை இஸ்லாமியா தொடக்க பள்ளியின் தாளாளர் ஜமால் இபுறாகீம் துவங்கி வைத்தார். இந்த அறிவியல் கண்காட்சிக்கு ஏராளமான பெற்றோர்கள் மற்றும் பிற மாணவ, மாணவிகளும் வருகை தந்து பார்வையிட்டனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் மாணவ செல்வங்களின் மத்தியில் அறிவியல் படைப்புகள் மீதான ஒரு ஆர்வத்தை வளர்க்கும். இந்த கண்காட்சியில் இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலை பள்ளியின் தாளாளர் முஹைதீன் இபுறாஹீம் கலந்து கொண்டு பார்வையிட்டார். இஸ்லாமியா துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி மற்றும் சக ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.