கீழக்கரை கலங்கரை விளக்கம் கடற்கரை பகுதியில் முறிந்து விழுந்த தென்னை மரம்

கீழக்கரை நகருக்கு அழகு சேர்க்கும் விதமாக வளைந்தும், நெளிந்தும் கலங்கரை விளக்கம் கடற்கரை பகுதியில் ஏராளாமான தென்னை மரங்கள் காட்சியளிக்கின்றன. ஆனால் அவை முறையாக தண்ணீர் விட்டு பராமரிக்காததன் விளைவாக, காய்ப்பு இல்லாமல் மகசூல் இன்றி காணப்படுகிறது. தற்போது கடற்கரை பகுதியில் வீசும் வேகமான காற்றால் தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இறைவன் அருளால் ஆள் நடமாட்டம் இல்லாத வேளையில் மரம் முறித்ததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

தகவல் : ஹபீப் முஹம்மது – அலையன்ஸ் சோசியல் சர்வீஸ்