கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் “வெள்ளி விழா மற்றும் 10வது மழலையர் பட்டமளிப்பு விழா” சிறப்பாக நடைபெற்றது….

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் வெள்ளி விழா மற்றும் 10வது மழலையர் பட்டமளிப்பு விழா நேற்று (25-02-2017) பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வருவாய் அதிகாரி அலி அக்பர் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மழலையிரின் பட்டமளிப்பு விழா “PRETTY POPPIES – The World of Blooming Buds” என்ற அடையாளத்துடன் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆர்வத்துடன் அனைத்து மழலைச் செல்வங்களும் முகமலர்ச்சியுடன் தங்களுக்கு வழங்கிய பட்டங்களை வண்ணக் கனவுகளுடன் பெற்றுச் சென்றனர். சிறப்பு விருந்தினர் அலி அக்பர் சிறப்புரையாற்றி, வெள்ளி விழா ஆண்டு மலரை வெளியிட்டதுடன் மழலையருக்கு பட்டங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை பள்ளியின் உதவிச் செயலாளர் முகம்மது ரபீக் வழங்கினார். அதைத் தொடர்ந்து பள்ளியின் ஆண்டறிக்கையை பள்ளியின் முதல்வர் சேகு சகுபர் பாதுஷா வாசித்தார். விழாவின் நன்றியுரயை முஹைதீனியா கல்விக் குழுவின் பொருளாளர் மற்றும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அஹமது வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் மெளலா முகைதீன் மற்றும் வடக்குத் தெரு ஜமாத் தலைவர் ரெத்தினா முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக பள்ளியின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நல்லுள்ளங்கள் நினைவு கூறப்பட்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள், வடக்குத் தெரு ஜமாஅத் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.