Home செய்திகள் கீழக்கரையில் குறைந்த விலையில் கிடாக் கறி விற்பனை துவக்கம் – கிலோ ரூ.440 – பொதுமக்கள் மகிழ்ச்சி

கீழக்கரையில் குறைந்த விலையில் கிடாக் கறி விற்பனை துவக்கம் – கிலோ ரூ.440 – பொதுமக்கள் மகிழ்ச்சி

by ஆசிரியர்

கீழக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே அனைத்து பொருள்களின் விலைகளும், கூலிகளும், வாடகைகளும் பெருமளவு உயர்ந்து விடுகிறது. இந்த உள்ளூர் விலையேற்றதால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரையில் கடந்த டிசம்பர் மாதம் திடீர் என கிடாக் கறி விலை ரூ440 ல் இருந்து ரூ.500 ஆக உயர்ந்தது. இது சம்பந்தமாக கீழக்கரை நகரில் உள்ள பொது அமைப்பினர் மற்றும் சமுதாய அமைப்பினர் வட்டாட்சியருக்கு புகார் மனு செய்தனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையாளர் தலைமையில் சம்பந்தப்பட்ட கறி கடை உரிமையாளர்களை அழைத்து அமைதி கூட்டம் நடை பெற்றது. இது சம்பந்தமாக நம் கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

http://keelainews.com/கீழக்கரையில்-ஆட்டிறைச்ச/

ஆனால் அந்த கூட்டத்தில் தீர்வு எட்டப்படாத நிலையில், கிடாக் கறி விலையை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக கடந்த வாரம் கீழக்கரை நகர் சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கரை ஆடறுத்தான் தெருவை சேர்ந்த ஹுசைனா கறி கடை உரிமையாளர் செய்யது அபுதாஹீர், ஹுசைன் ஆகியோர்கள் கலந்து கொண்டு குறைவான விலையில் கிடாக் கறி விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தம்பி நெய்னா பிள்ளை தெருவில் ஹுசைனா கிடாக் கறி கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு கிலோ கிடாக் கறி ரூ.440 க்கும் எலும்பு இல்லாத தனிக் கறி ரூ.550 க்கும் விற்கப்படுகிறது. இதனால் கீழக்கரை நடுத்தர மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து நெய்னா முஹம்மது தண்டையல் தெருவை சேர்ந்த குடும்ப தலைவி நாச்சியா அவர்கள் கூறுகையில் “வெளிநாடுகளில் வசிக்கும் நம் கீழக்கரை மக்கள் பெரும்பாலும் இந்த ஒரு மாதம் மட்டும் தான் ஊருக்கு வருகிறார்கள். அதனால் நம் ஊரின் நடப்புகள் அவர்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது. வெளி நாட்டில் இருந்து லீவில் வரும் நம் சொந்த, பந்தங்கள் உள்ளூர் வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள் கேட்கும் காசை கொடுத்து விடுகிறார்கள். அதே போல் தான் கறி, மீன் விலைகள் தாறுமாறாக விலை உயர்ந்து விடுகிறது. இதனால் எங்களுக்கும் அதே விலையில் தான் பொருள்களை விற்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால் எங்களை மாதிரி நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்க படுவோம். தற்போது திறக்கப்பட்டிருக்கும் கிடாக் கறி கடைக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.” இவ்வாறு தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

1 comment

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!