இரவு பகல் பாராது அயராது உழைக்கும் நகராட்சி பணியாளர்கள்..

கீழக்கரை நகரில் டெங்கு மற்றும் பல தொற்று நோய்கள் பரவி வருவதைக் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று இரவு நேரத்திலும் கொசு அழிக்கும் மருந்து அடிக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது.  இன்று நகராட்சி சுகாதார அலுவலர் ஹாஜா தலைமையில் 18வது வார்டு பகுதியில் இருந்து இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

நகராட்சியின் இப்பணியை கீழை நியூஸ் நிர்வாகம்  பாராட்டுகிறது.

2 Comments

  1. என் வீட்டு எண் 8/9 தச்சர் தெரு முட்டு சந்து.கவுன்சிலர் அனவர் அலி வீட்டுக்கு பின் புறம். ஊரில் வியாதிகள் மலிந்திருக்கும் இந்த நேரத்தில் கூட புகை அடிக்க இது வரை யாரும் வரவில்லை. 8 வருடங்களாக குடி நீர் வினியோகமும் இல்லஆனால் தண்ணீர் வரி பாக்கி கிடையாது போராடி அசந்து விட்டேன். எங்கள் சந்தில் பேவர் பிளாக் போடும் போது ஏற்கனவே எங்களால் கட்டப்பட்ட வாறுகால் ஜங்சன் பாக்ஸையும் புண்ணியவான் ஒப்பந்ததாரர் உத்தண்டி மூடி விட்டார். எவ்வளவோ தடுத்தும் புதிதாக ஜங்சன் பாக்ஸ் கட்டி இரும்பு மூடிபோட்டு தருவதாக ஜால்ஜாப்பு சொல்லி அவர் காரியத்தை முடித்து கொண்டார். நாளை அடைப்பு ஏற்பட்டால் உண்டாகும் செலவுக்கு யார் பொறுப்பு?உங்கள் மூலமாக இந்த தகவலை ஜனாப காஜா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மிகவும் உபகாரமாக இருக்கும் தம்பிகளா

    • இன்ஷாஅல்லாஹ் எங்களால் இயன்ற முயற்சிகளை செய்கிறோம்

Comments are closed.