தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி..

இன்று (08-02-2017) கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக இராமநாதபுர மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது

இக்கண்காட்சி மலைகள் உயிர்களின் அரண் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர். சுமையா அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்த ஓவியக் கண்காட்சியை இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கண்டு மகிழ்ந்தனர்.