கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவிப்பு வெளியீடு…

இன்று (08-02-2017) கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர் தமீம் ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் இது வரை ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆதாரத்துடன் மனு செய்தவர்களுக்கு 31-01-2017 வரை அத்தியாவசியப் பொருட்கள் வழங்க உத்திரவிடப்பட்டது. அவ்வாறு மனு செய்தவர்கள் வரும் 09-02-2017 மற்றும் 10-02-2017 ஆகிய இரு தேதிகளில் தங்களது ஆதார் அட்டைகளை இணைத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிய தவறும் பட்சத்தில் மீண்டும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது தடை செய்ய வாய்ப்புள்ளது. ஆகையால் பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டையை இணைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.