கீழக்கரை வடக்குத் தெரு மணல் மேடு அருகே வாறுகாலில் சிக்கிய மணல் லாரி..

கீழக்கரை வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா பகுதியில் இன்று மணல் மேடு அருகாமையில் மணல் ஏற்றி வந்த லாரியொன்று எதிர்பாராத விதமாக சாக்கடை வாருகால் மூடியை உடைத்து கொண்டு பின் சக்கர டயர் உள்ளிறங்கியது அச்சமயம் ஆள் நடடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

இது போன்ற விபத்துகள் ஏற்பட முக்கிய காரணம் கனரக வாகனங்கள் செல்லக்கூடிய பகுதிகளில் தரமில்லலாத, கனமில்லாத வாருகால் மூடிகள் வைத்து மூடுப்படுவதாகும்.  அடுத்ததாக இது போன்ற போக்குவரத்து பகுதிகளில் சாலைக்கு சமமாக மூடிகள் பதியப்படும் பொழுது சாலையையும், மூடிப்பகுதியையும் அடையாளப்படுத்த கூடிய வர்ணங்கள் பூசப்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணமாகும்.

இது போன்ற காரியங்களில் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தும் பட்சத்தில் விபத்துக்களையும், அரசாங்கத்துக்கு ஏற்படும் நஷ்டத்தையும் தவிர்க்கலாம்.