கீழக்கரையில் மறியல் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

கீழக்கரையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று 07.02.2017 தாலுகா அலுவலகம் முன்னதாக அற வழியில் மறியல் போராட்டம் செய்தனர். இதில் கலந்து கொண்ட 30 க்கும் மேற்பட்ட கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மாநிலம் தழுவிய இந்த போராட்டத்தில் முதன்மையாக குடிநீர் தட்டுப்பாடு, மீனவர் பிரச்னை, மத்திய அரசின் மக்கள் விரோத பண கொள்கை, நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றம் கோருதல், ஜல்லிக்கட்டு உரிமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், மாவட்ட குழு நிர்வாகி செல்வராணி, மாவட்ட செயற்குழு நிர்வாகி கருணாகரன் தலைமையேற்று நடத்தினர்