சீமை கருவேல மரங்களை வேரோடு அழிக்கும் மகத்தான பணியில் பியர்ல் மெட்ரிகுலேசன் மாணவர்கள்

கீழக்கரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சீமைக்கருவேலஞ் செடிகளை வேரோடு பறித்து மண் வளத்தையும், நிலத்தடி நீரையும் காக்க ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று களத்தில் இறங்கினர்.


இது குறித்து பள்ளியின் முதல்வர் சாஹிதா பானு அவர்கள் நம்மிடையே பேசும் போது ”7ஆம் வகுப்பிலிருந்து 9ஆம் வகுப்பு வரை ஏறக்குறைய 200 மாணவர்கள் ஆர்வத்துடனும் தொண்டு நலனுடனும் ‘கீழக்கரை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டம் உரக்கிடங்கு’ பகுதியில் உள்ள சீமைக்கருவேலம் செடிகளை வேரோடு பறித்து வந்தனர். மாணவர்கள் வேரோடு பறித்த செடிகளின் எண்ணிக்கை பின்வருமாறு

V|| – A 104
V|| – B 490
V||| – A 144
V||| – B 580
|X – A 52
|X – B 28

இவர்கள் வேரோடு பிடுங்கிய ஒவ்வொரு செடிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் முகமாக தாஸீம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரியின் நாட்டு நல பணிகள் (NSS) சார்பாக ஒரு செடிக்கு ஒரு ரூபாய் வீதம் வழங்கி உற்சாகப்டுத்தினார்கள்.

இதபோன்று கீழக்கரையில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளும் பயிலும் சிறார்களுக்கு சீம கருவேல மரத்தின் தீமைகளை எடுத்துக்கூறி இது போன்ற பொது சேவைகளில் ஈடுபடுத்துவது மூலம் நம் ஊரை கூடிய விரைவில் கருவேல மரம் இல்லாத நீர் வளம் மிக்க நகராக உருவாக்க முடியும்.


இந்த சின்னஞ் சிறுவயதில் சீரிய எண்ணத்துடனும், ஆர்வத்துடனும் செயலாற்றிய இந்த சிறார்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

கீழை நியூஸ் நிர்வாகக்குழு இந்த சிறார்களின் பணிகளை மனமார பாராட்டுகிறது.

3 Comments

  1. வேண்டுகோள்!..

    சமூக அக்கரை கொண்ட இந்த மாணவர்களை பாரட்டுவதுடன் .

    எனது வேண்டுகோள் மாணவர்கள் தாங்கள் முறையான (கை/ கால் உறை ,முகமூடி(mask) போன்ற தகுந்த பாதுகாப்பு
    நடவடிக்களுடன் கருவேல மரங்களை அகற்ற வேண்டுகிறோன்..

    • நல்ல கருத்து நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சியும் செய்வோம்

Comments are closed.