கீழக்கரை மயானப் பகுதியில் விஷ கரு வேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்…

கீழ்க்கரையில் இன்று (04-02-2017) சமீபத்தில் ஏலம் விடப்பட்ட பகுதியான பொது மயானப்பகுதியில் சீம கருவேலமரம் அகற்றும் பணி தொடங்கியது.

இந்த மயான காட்டில் உள்ள கருவேல மரங்களை அழிப்பது மிகவும் சவாலான விசயமாகும், காரணம் மிகவும் அதிகம் பரப்பளவு உள்ள பகுதியாகும். கருவேலம் அகற்றும் பகுதியில் இருந்து விஷ ஜந்துகளும் வெளியேறிய வண்ணம் உள்ளது. இங்கு பணி செய்யும் பணியாளர்களுக்கும் இது ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

தற்போது சீமை கருவேல மரங்கள் வெட்டப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அகற்றப்படுகிறது.