Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வரி நிலுவையை செலுத்த கீழக்கரை நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்

வரி நிலுவையை செலுத்த கீழக்கரை நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்

by ஆசிரியர்

கீழக்கரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரியினங்களை, உடனடியாக செலுத்தி, நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது குறித்து ஆணையாளர் கீழை நியூஸ் தளத்திற்கு அளித்த தகவலில் கூறியிருப்பதாவது: கீழக்கரை நகராட்சியில், வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி என தற்போது நடப்பு ஆண்டு நிலுவையாக ரூ.50,00000 ஐம்பது இலட்சம் உள்ளது. தற்போது, 50 சதவீதம் பேர் மட்டுமே வரி செலுத்தி உள்ளனர்.இதையடுத்து, வரி செலுத்தாத மீதமுள்ளவர்களின் வீடு, கடை மற்றும் தொழில் நிறுவனங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, வீடு வீடாக வரி வசூலிக்க அலுவலர்கள் சென்று வருகின்றனர்.

இதுவரை வரி செலுத்தாதவர்கள், தங்கள் பகுதியில் வரும், வரி வசூல் செய்யும் அதிகாரிகளிடமோ அல்லது கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வரி வசூல் மையத்திலோ, உடனடியாக செலுத்தி, நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முறையாக தங்கள் வரியை செலுத்துவதால் நம் நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட ஏதுவாக அமையும். இவ்வாறு தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!