Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இஸ்லாமியா பள்ளி மற்றும் பிற பள்ளிகளில் நடந்த விழிப்புணர்வு முகாம் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது அரசாங்க அதிகாரிகள் சட்ட நடவடிக்கை – தாளாளர் எச்சரிக்கை..

இஸ்லாமியா பள்ளி மற்றும் பிற பள்ளிகளில் நடந்த விழிப்புணர்வு முகாம் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது அரசாங்க அதிகாரிகள் சட்ட நடவடிக்கை – தாளாளர் எச்சரிக்கை..

by ஆசிரியர்

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சமீபத்தில் ரூபெல்லா தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம் அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் நடந்து அடுத்த நாள் முதல் எதிர்மறையான கருத்துக்கள் ஒலி வடிவில் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது. அதன் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு இஸ்லாமியா பள்ளியின் தாளாளரை கீழை நியூஸ் சார்பாக தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.

அப்பொழுது தாளாளர் முகைதீன் இபுராஹீம் கூறியதாவது, விழிப்புணர்வு கூட்டத்தின் முக்கிய நோக்கமே, மக்களிடம் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாகும். ஆனால் அந்த நோக்கத்தையே கொச்சைபடுத்துவது போல் அவதூறு பரப்புவது வருத்தத்துக்கு உரிய விசயமாகும். மேலும் பள்ளி நிர்வாகம் சார்பாகவோ அல்லது மருத்துவர்கள் மூலமாகவோ எந்த வகையான வற்புறுத்தலும் செய்யவில்லை, ஆனால் அதனுடைய தன்மையை விளக்கி தடுப்பூசி போடுவதும், தவிர்த்து கொள்வதும் பெற்றோர்களின் விருப்பதிற்கு உட்பட்டது என்றே கூறப்பட்டது.

அதேபோல் பெற்றோர்கள் தங்களுடைய விருப்பங்களையும் பள்ளியின் டைரி மூலம் பிப்ரவரி 6ம் தேதிக்குள் எழுத்து மூலம் தெரிவிக்கலாம். அதே போல் தடுப்பூசி போடும் சிறார்களுக்கும் எந்த அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும். ஆகையால் பள்ளிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இது சம்பந்தமாக சைபர் க்ரைம் மூலம் வதந்தி பரப்பும் நபர்கள் மீது மருத்துவர்களும், அரசாங்க அதிகாரிகளும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகியுள்ளார்கள்  என்று கூறி முடித்தார்.

ஏற்கனவே சில ஊர்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கீழை நியூஸ் நிர்வாகக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

TS 7 Lungies

You may also like

1 comment

Mohamed Mahroof February 2, 2017 - 11:13 pm

இஸ்லாமியா ஸ்கூலில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சரியான ஒலி பெருக்கி வசதி செய்சப்படவில்லை என்று பொது மக்கள் ப்லரும் சொல்லக் கேள்விநிகழ்ழ்ச்சியி

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!