கீழக்கரை மக்கள் களம் பொதுமக்களுக்கு வேண்டுகோள்..

கீழக்கரையில் சமீப காலமாக பரவி வரும் டெங்கு மற்றும் தொற்று நோய்களை தடுக்கும் விதமாக கீழக்கரை நகராட்சி சார்பில் சுகாதார துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது சம்பந்தமாக கீழை நியூசில் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.

கீழக்கரையில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்..

இந்தப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் மக்கள் உடல்நலன் கருதி முழு ஒத்துழைப்பு அளிக்க கீழக்கரை மக்கள் களம் கேட்டு கொள்கிறது.

இதுபற்றி சட்டப்போராளி அபுசாலிஹ் கூறுகையில், நகராட்சி சுகாதார பணிக்கு ஊரின் நலத்தை கருத்தில் கொண்டு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அதே போல் சுகாதார பணியாளர்களை வீட்டின் உள்ளே வர அனுமதித்து பிரிட்ஜ் மற்றும் நீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ள இதர இடங்களை ஆய்வு செய்து மருந்து தெளிக்க அனுமதிக்க வேண்டும். அது போல் பூட்டி கிடக்கும் வீட்டின் உரிமையாளர்களும் வீடுகளைத் திறந்து பல நாட்களாக தேங்கி கிடக்கும் நீரை அகற்ற உதவி செய்ய வேண்டும்.  இவ்வாறு ஒத்துழப்பது மூலமே கீழக்கரையில் டெங்கு காய்ச்சலை முழுமையாக ஒழிக்க முடியும். அதே சமயம் ஒத்துழைக்க மறுக்கும் வீட்டின் மீது 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் நகராட்சிக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் பதிவிட விரும்புகிறேன் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..