கீழக்கரையில் நில வேம்பு கசாயம் வினியோகம்… இஸ்லாமிய கல்வி சங்கம் ஏற்பாடு…

கீழக்கரையில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் தலைதூக்கியுள்ளது. அதற்கு நிவாரணமாக கீழக்கரை நகராட்சி சார்பாக பல தினந்தோறும் பல பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் மற்றும் கீழக்கரை நகராட்சி இணைந்து கீழக்கரை நகர் முழுவதும் நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்யும் முகாம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை இஸ்லாமிய கல்வி சங்கம் தலைவர் தவ்ஹீத் ஆலீம் செயலாளர் அஜ்மல் கான் முகாமை துவங்கி வைத்தனர். பொருளார் ஹமீது சல்மான் கான் மற்றும் சட்ட ஆலோசகர் சாலிஹ்ஹீசைன் ஆகியோர் முகாம் ஒருங்கினைப்பு வேலைகளை மேற்கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பாஸில் அக்ரம் துணைச் செயலாளர் அஸ்பாக் மற்றும் உறுப்பினர்கள் காதர், அலாவுதீன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் வடக்குத் தெருவில் உள்ள காலவா சந்து எனப்படும் சங்குமால் தெருவில் உள்ள 20க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடதக்க விசயமாகும்.

இந்நிகழ்வில் முஸ்லிம் பஜார், சேரான் தெரு, வடக்குத் தெருவில் உள்ள சங்குமால் தெரு, அத்தியிலைத் தெரு, சின்னக்கடைத் தெரு, ஜின்னா தெரு உட்பட ஆறுக்கும் மேற்பட்ட தெருக்களில் நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சந்திரசேகர் மற்றும் பிற அலுவலர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.