கீழக்கரை சட்டப்போராளிகளின் சட்டப்போராட்டம் துவக்கம்.. வாருகால் மூடிகள் எண்ணும் பணி தொடங்கியது..

கீழக்கரையில் உள்ளமூடப்படாத சாக்கடை வாருகால் மூடிகளால் முதியவர்களும், பள்ளிக்கு செல்லும் சிறார்களும், வழிப்போக்கர்களும் சாக்கடையில் விழக்கூடிய சூழல் பல இடங்களில் உள்ளது. இதனால் டெங்கு மற்றும் பல தொற்று நோய்களும் பரவக்கூடிய அபாயம் மட்டுமல்லாமல் அதனால் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இது சம்பந்தமாக பல காலகட்டங்களில் நகராட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போதெல்லாம் ஓப்பந்ததாரர்கள் பணியை முழுவதுமாக முடித்துவிட்டார்கள் என்ற பதிலே வந்தது. ஆனால் உதாரணமாக 19 மற்றும் 20வார்டு பகுதிகளில் பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் மூடப்படாமல் நோய்களை பரப்பும் வண்ணம் திறந்தபடியே காட்சியளிக்கிறது.

சமீபத்தில் சமூக ஆர்வலர்கள் முயற்சியால் தகவல் அறியும் சட்டம் மூலமாக சமீபத்தில் கொடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மூலம் எத்தனை வாருகால் மூடிகள் போடப்பட்டுள்ளன என்ற விபரங்கள் பெறப்பட்டன. அந்த தகவலை அடிப்படையாக கொண்டு வடக்குத் தெரு சமூக நல அமைப்பு ( NASA) நிர்வாகிகள் உதவியுடன் வாருகால் முதற்கட்டமாக மூடிகளின் எண்ணிக்கைகளை எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது பற்றி வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) தலைவர் அரஃபாத் கூறுகையில், நகராட்சியின் மூலம் எங்களுக்கு கிடைத்த தகவலில் 420 மூடிகள் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, ஆனால் 50சதவிதம் கூட போடப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது, அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 19 மற்றும் 20வது வார்டு பகுதிகளில் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது, இப்பணி விரைவில் நகர் முழுதும் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதன் மூலம் நகராட்சி நிர்வாகத்திடம் மேல் முறையீடு செய்து விடுபட்டுள்ள இடங்களின் பணிகளை நிவர்த்தி செய்ய சட்டரீதியாக ஒப்பந்ததாரர்களை வலியுருத்த முடியும்.

1 Trackback / Pingback

  1. கீழக்கரையில் தரமற்ற சாக்கடை மூடிகளால் வீணாகும் மக்கள் பணம்.. - கீழைநியூஸ் (Keelainews.com)அன்புடன் வரவேற

Comments are closed.