கீழக்கரைக்கு மிக அவசியம் பொது விளையாட்டு மைதானம்..கீழக்கரை மக்கள் பொது தளம் வேண்டுகோள்

*மாவட்டகளில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் கீழக்கரை என்று சொன்னாலே எதிர் அணிக்கு ஒரு பயத்தை உண்டுபண்ணும்* என்பதை யாராலும் மறுக்க முடியாது…

அந்த அளவிற்கு விளையாட்டு துறையில் உரிய பயிற்சி இல்லாமல் கூட நமது இளைஞர்கள் சிறந்து விளைகிறார்கள், அந்த அளவிற்கு தனித்திறமை பெற்று மாவட்டம் தோறும் நடைபெறும் ஏனைய போட்டிகளில் பங்குபெற்று வெற்றி கனிய பரித்துக்கொண்டு வருகிறார்கள்…

இவ்வளவு திறமை இருந்தும் நமதூருக்கு போதிய விளையாட்டு மைதானம் இல்லாமல், நமது இளைஞர்கள் தன் திறமைகளை வெளிக்கொணர முடியாமல் தன் கவனகளை வேறு பக்கம் செலுத்திக்கிறார்கள், அதன்மூலம பல விபத்துகள், விமர்சனகள் , சண்டை சச்சரவுகள் இதற்கு உள்ளாகிறார்கள். இதனால் தன்வீடிற்கும் தன் தெருவிற்கும், ஊருக்கும் கெட்ட பெயர் உண்டாக பொது மைதானம் இல்லாமல் இருபதும் ஒரு காரணம்..

கீழக்கரையில் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய ஹமீதியா விளையாட்டு மைதானம் மிக முக்கிய பங்கு இருக்கிறது,

அங்கு பயிற்சி எடுத்துதான் என்னாலும் கூட division & Distric ( Basket & Volley Ball ) வரைய செல்லமுடிந்தது. இன்னும் பல இளைஞர்கள் STATE LEVEL – வரை சென்று உள்ளார்கள்.   இப்படி பல வீரர்களை உருவாக்கிய அந்த மைதானம் இப்போது பூட்டு போட்டு வைத்துள்ளர்கள், ஆனால அந்த பூட்டிற்கு டிசம்பர் மாதத்தில் விடுதலை கிடைக்கிறது , அல்ஹம்துலில்லாஹ் டிசம்பர் மாதத்தில் கிடைக்கும் அந்த விடுதலை ஏனைய அனைத்து மாதத்தில் கிடைத்தால் மிக்க மகிச்சியாக இருக்கும், இதற்க்கு சமந்தப்பட்ட தயவான்கள் முயற்சி எடுத்து நல்ல வழிவகை செய்யவேண்டும்.

“ *Let us Sacrifice our Today so that our children can have a better tomorrow* “ APJ Abdul Kalam.

தகவல்.ஜாஹிர் ஹூசைன் (கீழக்கரை)