பசுமையடையுமா கீழக்கரை.. மக்கிப் போகுமா ப்ளாஸ்டிக் .. 1ம் தேதி முதல் கீழக்கரையில் ப்ளாஸ்டிக் பை தடை..

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 21வார்டுகள் உள்ளன. தற்போது வரும் 1ம் தேதி முதல் கீழக்கரைக்கு உட்பட்ட நகராட்சியில் ப்ளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு தடை செய்யப்படுகிறது என்று நகராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. கீழக்கரை இந்தியன் மார்ட் அப்துல் சமது அவர்கள் கூறுகையில், இந்த அறிவிப்பு போதிய அவகாசம் இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், வெறும் அறிவிப்பால் இதைக் கட்டுப்படுத்த முடியாது காரணம் அருகில் உள்ள கிராமத்து மக்கள் தங்களுடன் ப்ளாஸ்டிக் பை கொண்டு வந்து உபயோகப்படுத்த வாய்ப்பு உள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து வேறு பஞ்சாயத்துக்கு உட்பட்டு வருவதால், தடை செய்தாலும் தாராளமாக ப்ளாஸ்டிக் புழங்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். கீழக்கரை நகராட்சி வெறும் அறிவிப்புடன் நிறுத்திவிடாமல் சுற்று சூழலை கருத்தில் கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும்…