கீழக்கரையில் இலவச இருதய சிகிச்சை முகாம்..

கீழக்கரையில் 28-12-2016 மற்றும் 29-12-2016ஆகிய இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனை மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் இருதய சிகிச்சை முகாம் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை தடைபெறும்.

img_2594

இம்முகாமில் சகோ. MMK இபுராஹிம், இஸ்லாமிய பள்ளி தாளாளர் தலைமையுரையாற்றுகிறார். ஜனாப்.H. சிராஜுதீன், ஹமீதியா துவக்கப்பள்ளி தாளாளர் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். திரு. S.சர்வேஸ் ராஜ், IPS, இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் விழாவை துவக்கி வைக்கிறார்.இந்திகழ்ச்சியில் டாக்டர். AS. கியாசுதீன், நிர்வாக இயக்குனர், பயோனியர் மருத்துவமனை அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.

மேலும் இந்த விழாவில் டாக்டர்.M. பிரேம் சேகர், மூத்த குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர், டாக்டர்.அமல்.அ.லூயிஸ், மூத்த இருதய சிகிச்சை நிபுணர், டாக்டர். விக்னேஷ் புஷ்பராஜ்,மூட்டு முதுகுத்தண்டு சிகிச்சை நிபுணர் ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக டாக்டர்.ஹபிப் அஹமது அப்துல் கயூம் அவர்கள் நன்றியுரை வழங்குகிறார்கள். இம்முகாமில் அனைவரும் பங்கேற்று பயன் பெறுமாறு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கேட்டு கொண்டுள்ளார்கள்.