கல்வி ஒளி வீசும் கீழக்கரையில், கண்ணொளி வீச இலவச கண் சிகிச்கை முகாம்.

கீழக்கரையில் வரும் 31 டிசம்பர் 2016 அன்று இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெறுகிறது.  கீழக்கரையில் உள்ள பழைய குத்பா ஜமா அத் மற்றும் இராமநாதபுரம் வாசன் கண் மருத்தவமனையும் இணைந்து இம்முகாமை நடத்துகிறார்கள்.  இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கு குளிகாரத் தெருவில் அமைந்துள்ள மஹ்தூமிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மஹ்தூமிய பள்ளியின் தாளாளர் ஹாஜி. A.K.S  ஹமீது சுல்தானி அவர்கள் தலைமை தாங்குகிறார்கள்.  இந்நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பு பணியை பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஜனாப்.ஹாஜி H.  முகைதீன் அவர்கள் செய்கிறார்கள்.  மேலும் கிழக்குத் தெரு ஜமாஅத் உதவிப் பொருளாளர் ஜனாப். M.முகம்மது அஜிஹர் அவர்கள் இம்முகாமை தொடங்கி வைக்கிறார்கள்.  இந்த முகாமில் கண் புரை, கண்ணில் நீர் அழுத்தம், கண்ணில் நீர் வடிதல், கண்ணில் சரை வளர்தல், ஒற்றை தலைவலி கண் பார்வை குறைபாடுகள் போன்ற நோய்களுக்கு ஆலேசானைகள் வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.  மேலும் இம்முகாம் சிறந்த முறையில் நடைபெற மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் மற்றும் கீழக்கரை சட்டபோராளி இணையதள குழுமம் ஆகியோர் தங்களுடைய முழு ஆதரவை அளித்துள்ளார்கள்.