கீழக்கரை அறக்கட்டளைகள்…


கீழக்கரை மக்கள் நலனுக்காக கொடையளிப்பவர்கள் ஏராளம். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் செய்பவர்களும் ஏராளம்.

கீழக்கரையில் இரு பெரும் அறக்கட்டளைகள் செயல்பட்டு பல்வேறு கல்வி ஸ்தாபனங்கள் நடத்தி வருவதை அனைவரும் அறிவோம். சீதக்காதி அறக்கட்டளையும், முகம்மது சதக் அறக்கட்டளையும் தான் அவ்விரண்டும்.

இது போல தொலைநோக்குப்பார்வையுடன், ஆரம்பம் செய்து இலக்கை நோக்கி பயணிக்கும் அறக்கட்டளைகளை உலக்றியச்செய்வதே இந்த தொகுப்பின் நோக்கம்.

பகுதி-1 :

சத்தியப்பாதை கல்வி தர்ம அறக்கட்டளை (SECT).

கீழக்கரை வடக்குத்தெருவைச்சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் முன்னாள் ஜமாத் தலைவர் ஜனாப் அப்துல்லாஹ் அவர்களின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் இந்த அறக்கட்டளையானது 2015ம் ஆண்டு தமிழக அரசின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்தினரால் மட்டுமே நிதி செய்யப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் தொடங்கி ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும், கீழக்கரை மக்களுக்கு கல்வியறிவு , தன்னிறைவு என்ற தொலைநோக்குப்பார்வையுடன் ஆரம்பம் செய்து தற்சமயம் சிற்சிறிய உதவிகள் செய்து வருகின்றனர்.

2015-2016ம் ஆண்டில், கல்வி உதவி, திருமண உதவி, மருத்துவ உதவி, சமூக நற்பணி உதவி, நோன்பு கால ஃபித்ரா என்று தோராயமாக ரூ.5 லட்சம் உதவி செய்திருக்கின்றனர்.

இந்த அறக்கட்டளையுடன் இணைந்து பணி செய்ய விரும்புவோர், உதவிகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய விபரங்கள்
http://www.sathyapathai.com/ என்கிற வலைதளத்தில் கிடைக்க வழி செய்யப்பட்டிருக்கிறது. [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்..

தகவல்: ஜனாப் ஆப்தீன், சத்தியப்பாதை அறக்கட்டளை
தொகுப்பு: M. ரஸீம்

(தங்களால் நடத்தப்படும் அறக்கட்டளைகள் பற்றிய விபரங்களை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பித்தந்து பிரசுரிக்கவும்)