Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரைக்கு அழகு சேர்க்கும் என்று எண்ணிய பொதுமக்களை அழ வைக்கிறது பேவர்ப்ளாக்..

கீழக்கரைக்கு அழகு சேர்க்கும் என்று எண்ணிய பொதுமக்களை அழ வைக்கிறது பேவர்ப்ளாக்..

by ஆசிரியர்
கீழக்கரையில் கடந்த நகராட்சி நிர்வாகத்தில் கீழக்கரைக்கு அழகு சேர்க்கிறோம் என்று கூறி பல கோடி ரூபாயில் நகரில் பல தெருக்களில் பேவர்ப்ளாக் சாலை அவசர கதியில் போடப்பட்டது. ஆனால் போட்ட சில வாரங்களிலேயே பல பகுதிகளில் பதிக்கப்பட்ட கற்கள் பெயர்ந்து பல விபத்துக்கு காரணமாகியது எல்லோரும் அறிந்த விசயம். இன்று காலை கீழக்கரை SDTU நகரச் செயலாளர் சகோ. ராசிக் அவர்கள் கூறியதாவது சமீபத்தில் கீழக்கரை நடுத்தெரு சாலையில் வேலை செய்த குத்தககைக்காரர் பைப்புகள் பதிப்பதற்காக கற்களை நீக்கிவிட்டு புதிய பைப்புகளை பதிக்காமல் பழைய பைப்புகளையே பதித்து விட்டதாகவும் அதற்காக நீக்கப்பட்ட பேவர்ப்ளாக் கற்கள் சரிசெய்யப்படாமல் சாலை முழுவதும் பரவிக்கிடப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் மக்கள் வரிப்பணத்தில் வேலைப் பார்க்க வேண்டிய குத்தகைக்காரர் புதிய பைப் பதிக்க பணம் கொடுத்த பின்பும் முறையாக பழுது பார்க்காமல் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு உண்டாகும் அளவுக்கு நடந்து கொண்டார் என்று குறிப்பிட்டது மிகவும் வேதனைக் குரிய விசயம். இதை கீழக்கரை நகராட்சி கவனத்தில் கொண்டு மக்கள் பிரச்சினையை உடனடியா தலையிட்டு தீர்க்க வேண்டும். இதே போல் கீழக்கரையின் மற்றொரு பிரதான சாலைகளான மேலத் தெருவில் உள்ள ஹமீதிய பள்ளியில் இருந்து உஸ்வத்துல் ஹசனா சங்கம் செல்லும் சாலை, வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி செல்லும் சாலை, நெய்னா முகம்மது தண்டையார் பகுதியில் உள்ள சாலைகளிலும் மற்றும் பல இடங்களிலும் இதுவரை சாலைப் பணிகள் முழுமைப்படுத்தாமல் உள்ளது குறிப்பிடதக்கது. இது போன்ற தரமற்ற பணிகளுக்கு முக்கிய காரணம் தகுதியில்லாத ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் அவசர கதியில் வழங்குவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான முறையில் மேற்பார்வையிடாததுமே மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகிறது.

TS 7 Lungies

You may also like

1 comment

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!