மக்களை பலி வாங்கும் புதிய பண மாற்ற திட்டம்.. கீழக்கரை வங்கி வாசலில் முதியவர் மயக்கமடைந்து கீழே விழுந்ததில் மரணம்..

கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த யூசுப் சித்திக் அலி (57) எனும் முதியவர் இன்று காலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாசலில் பணம் எடுக்க வரிசையில் காத்து நின்ற பொழுது மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோதும் சிகிச்சை பலன் அளிக்காமல் வபாத்தாகிவிட்டடார்கள். இன்னும் இந்த அரசாங்கத்தின் அவசரகோல திட்டம் எத்தனை அப்பாவி மக்களை பலி வாங்கப் போகிறதோ தெரியவில்லை..