
மோடி,அமித்ஷா மீது மோசடி வழக்கு-ரூ.15 லட்சம் தராமல் மக்களை ஏமாற்றியதாக வழக்கறிஞர் அளித்த புகாரால் பரபரப்பு.!
மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா மீது ரூ.15 லட்சம் தராமல் மக்களை ஏமாற்றியதாக பின்வரும் பிரிவுகளின் கீழ் ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 415 (மோசடி) மற்றும் 420 (நேர்மையின்மை), அதனுடன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 123(பி)ன் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போடப்படும் என்பதாக கூறி மக்களை ஏமாற்றியதாக மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆகியோர் மீது ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ஹெச்.கே.சிங் என்பவர் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் அந்த வழக்கில், குடியுரிமை சட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தனர். அதனை கொண்டு வந்துவிட்டனர். ஆனால் 15 லட்சம் தருவதாக அறிவித்தனர். அது எங்கே? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
15 லட்சம் விவகாரம் ஏற்கனவே பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் தற்போது இந்த வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.