Home செய்திகள் தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே “ஊருக்கு நூறு கை”

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே “ஊருக்கு நூறு கை”

by mohan

பொதுமக்கள் பங்களிப்புடன் நீர் நிலைகளை தூர் வாரும் பணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வாதலக்கரை ஊராட்சியில் பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ள “ஊருக்கு நூறு கை” “ஊருக்காக ஒரு நாள் ஊர் காக்க ஒரு நாள்” திட்ட துவக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.குடிநீர் குட்டை, ஊரணிகள் தூர்வாரும் ஊருக்கு நூறு கை திட்டத்தினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்:-

“தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுகுளங்கள், ஊரணிகள்,குட்டைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்களின் கோரிக்கையின்படி பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாறி புனரமைக்க ஊருக்கு நூறு கை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், பொதுமக்கள்“ஊருக்காக ஒரு நாள் ஊர் காக்க ஒரு நாள்” என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டம் விளாத்திகுளம் வட்டம் வாதலக்கரை கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஊரக பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஊரணிகள், குட்டை, சிறுகுளங்கள் தூர்வாரவும் கிராம பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மரம் நடுதல் உள்ளிட்டவைகளும், கழிவுநீர் சுத்திகரித்தல், திடக்கழிவு மேலாண்மை, நெகிழிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பொதுமக்கள் பங்களிப்புடன் செய்யப்படவுள்ளது.

இத்திட்டத்தில் அரசு உதவியுடன் பொதுமக்கள் பங்களிப்புடன் பல நல்ல பணிகள் மேற்கொள்ளப்படும். பராமரிக்கப்படும் குளங்களை குப்பைகளை போடாமல் பொதுமக்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளிலும் மழைநீர் சேகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மண் அள்ளும் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் நிர்வாக உதவிகள் செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள டிராக்டர் உள்ளிட்டவைகளை இத்திட்டத்திற்கு பயன்படுத்தி உங்களது கிராமங்களின் குடிநீர் ஆதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.வாதலக்கரை கிராம பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க இன்று இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று தினங்களுக்குள் குளம் தூர்வாருதல், வரத்து கால்வாய் மற்றும் கூடுதல் நீர் வழிந்தோடும் கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் முடிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதியில் உள்ள பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதுடன் நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கும் உதவிட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வரத்து கால்வாய் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார். மேலும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு மற்றும் திரவ கழிவு மேலாண்மை பணிகளையும், மழைநீர் சேமிப்பு அமைப்புகள் புனரமைக்கப்படுவதையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் உமாசங்கர், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நவநீதகிருஷ்ணன், சிவபாலன், ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் ரெஜினால்டு, உதவி பொறியாளர் முத்துக்குமார், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி, முக்கிய பிரமுகர்கள் ஞானகுருசாமி, தனஞ்ஜெயன், சீனி (எ) ராஜகோபால், பால்ராஜ்,செண்பராமன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com