
கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை பிர்க்கா நல்லிருக்கை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறை தீர்க்கும்ககூட்ட முகாம் கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர் திருகே எம் தமிம்ராஜா தலைமையிலும் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திரு ராஜா முன்னிலையிலும் நடைபெற்றது இம்முகாமில் *மக்களால் நான் மக்களுக்காக நான் என்று உயர்ந்த நோக்கத்துடன் வாழ்ந்து மறைந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை* நினைவு கொள்ளும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது
இம்முகாமில் குடும்பஅட்டையில் பெயர்சேர்த்தல் பெயர்நீக்கம் , பெயர் திருத்தம் , முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 42 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இம்முகாமில் வட்ட வழங்கல் அலுவலக தலைமை உதவியாளர் திரு செல்வராஜ் திருஉத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் திருமதி கோகிலா கிராம நிர்வாக அலுவலரகள் திருமதி கோகிலாதேவி, சபிதா உதவியாளர் பிரபு கிராமத்தலைவர் திரு கோபால் உட்படகிராம முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர் போக்குவரத்து வசதி குறைந்த , தொலைதூரத்தில் உள்ள நல்லிருக்கை கிராமத்திற்கே வந்து குறைகளை தீர்த்து தரும் திட்டம் தந்த தமிழக அரசுக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்
You must be logged in to post a comment.