கீழக்கரை மக்கள் களம் அறிமுகம்


கீழக்கரை மக்கள் களம் அறிமுகம்…..

கீழக்கரை மக்களுக்காக மக்கள் நலனுக்காக…

➢ நகரின் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

➢ இரத்த சோகை உடைய பெண்கள் மற்றும் குறைந்த எடையுடன் பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

➢ மக்கள் நோய் நொடி இன்றி சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் வாழ்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

➢ தினம் தோறும் நம் தெருவுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பை மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு நமது தெருவை முன்னுதாரனமாக மாற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

➢ கொடிய காய்ச்சல் மற்றும் நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்றும் வண்ணம் தடுப்பு மருந்துகள் இடைவெளியின்றி தெளிக்கப்படும்.

➢ மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பூசிகள் போடுவதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

➢ நீண்ட காலமாக தீர்க்கபடாமல் இருக்கும் மழை தண்ணீர் தேக்கம், சாக்கடை நீர் போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
➢ நவீனபடுத்தப்பட்ட அரசு மருத்துவமனையை அதனுடைய தன்மையும், சேவையின் தரமும் மாறாமல் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

➢ அரசு மருத்துவமனையின் செயல்பாட்டை கண்காணித்து மேம்படுத்த மக்கள் கண்காணிப்பு குழு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

➢ அனைவருக்கும் பாதுகாப்பான் தரமான இலவச குடிநீர் வசகி செய்து தரப்படும்.

➢ தரமான மருத்துவ சேவை நம் தெரு மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

➢ ஏழை கர்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவம் மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வசதி செய்து தரப்படும்.

➢ மருத்துவ ஆலோசனை குறித்து மக்கள் விழிப்;புணர்வு பெறும் வகையில் மாதந்தோறும் மருத்துவ கையேடு வழங்கப்படும்.
➢ துப்புரவு தொழில் இயந்திரமாக்கப்பட்டு தொழிலாளர் சுகாதாரம் பேணப்படும்.

➢ துப்புரவு தொழிலாளர்களுக்கு பணியின் போது பயன்படுத்த தேவையான பாதுகாப்பு சாதனங்கள் உறுதி செய்யப்படும்.

➢ துப்புரவு தொழிலாளர்களுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் தடுக்கப்பட்டு அவர்கள் நிவாரணம் அடைய முழு முயற்சி செய்யப்படும்.

➢ நகராட்சி ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறந்த காப்பீடு திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்படும்.
➢ அரசாங்கத்தால் வழங்கப்படும் கல்வி கடன் மற்றும் வேலை வாய்ப்பு தொழில் கடன் மற்றும் இதர சலுகைகள் சிரமம் இன்றி கிடைத்திட வழிகாட்டும் மையம் அமைக்கப்படும்.

➢ அரசாங்கம் அறிவிக்கும் மக்கள் நல திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

➢ நமது ஊரில் அடிக்கடி நிகழும் இரண்டு சக்கர வாகன விபத்துக்களை தடுக்கும் வண்ணம் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்.

➢ மக்களுக்கு தேவைப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சான்றிதழ்களும் எளிதாக பெற வழி செய்யப்படும்.

➢ நமது ஊர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கி தரும் வகையில், பல பகுதிகளில் இருக்கும் வேலை வாய்ப்புகளை பற்றி முறைப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிவிப்பு செய்யப்படும்.

➢ ஊரில் குவிந்து வரும் குப்பைகளை முறைப்படி அகற்றி சுகாதாரம் பேணும் வகையில் கழிவு மேலான்மை அமைப்பு (WASTE MANAGEMENT SYSTEM) உருவாக்கப்படும்
➢ ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிமுறைகளும் கையாளப்படும்.
➢ ஊழல் அற்ற முற்றிலும் வெளிப்படையான நேர்மையான நிர்வாகம் அமைய உறுதி தரப்படும்.
➢ ஊழல் செய்யும் அரசு நிர்வாகிகளுக்கு தக்க தண்டனை வழங்க முழு சட்ட உதவிகளும் அளிக்கப்படும்.
➢ ஊழல் இல்லாத சமுதாயமாக நம் தெருவை மாற்றி அரசாங்க நிர்வாகிகளுக்கு முன்னுதாரனமாக திகழ அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் என்ற பெயரில் மாதத்திற்கு ஒரு முறை சேர்மன் மற்றும் கவுன்சிலர் நேரடியாகவே மக்களிடம் வந்து தங்கள் குறைகளை கேட்கும் வண்ணமாக மக்கள் களங்கள் அமைத்து, மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தீர்க்கப்பட வேண்டிய குறைகள் உடனே தீர்க்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும