Home கீழக்கரை மக்கள் களம் கீழக்கரையில் கஷ்டமப்பா.. கஸ்டம்ஸ் ரோட்டில் ‘உலகத் தரத்துடன்’ போடப்பட்ட ஜங்க்சன் மூடி உடைந்ததால் விபத்தில் சிக்கும் அப்பாவிகள் – நகராட்சியில் மூடி ரெடியா ..?

கீழக்கரையில் கஷ்டமப்பா.. கஸ்டம்ஸ் ரோட்டில் ‘உலகத் தரத்துடன்’ போடப்பட்ட ஜங்க்சன் மூடி உடைந்ததால் விபத்தில் சிக்கும் அப்பாவிகள் – நகராட்சியில் மூடி ரெடியா ..?

by keelai

கீழக்கரை நகரராட்சி பகுதிகளில் சாக்கடை வாருகால் மூடி போடுவதற்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததார்கள் தரமற்ற பணிகளை செய்ததால் பல்வேறு இடங்களில் மூடிகள் உடைந்து போயுள்ளது. இது குறித்து சட்டப் போராளிகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு இனி நகராட்சியில் எந்த ஒரு ஒப்பந்த பணியும் வழங்க கூடாது என மனு கொடுக்கப்பட்டு நகராட்சியிடம் இருந்து பதிலும் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக புதிதாக ‘உலகத் தரத்துடன்..??’ கழிவு நீர் ஜங்க்சன் மூடி போடப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரரால் போடப்பட்ட தரமற்ற மூடி ஒரே மாதத்தில் உடைந்து போனது.

இது குறித்து பல்வேறு சமூக ஆர்வலர்களும் நகராட்சி ஆணையரை சந்தித்து பலமுறை முறையிட்டும் இன்னும் மூடி ரெடியாகவில்லை. இதனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கழிவு நீர் குழாய் ஜங்க்சன் மூடி இல்லாததால் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகிறது.

பள்ளி சிறுவர்களும், முதியவர்களும் பலமுறை இந்த பள்ளத்தில் விழுந்து அடிபட்டு செல்வது தொடர்கதையாகி வருகிறது. சட்டப் போராளிகள் தளம் சார்பாக கடந்த மாதம் நகராட்சி ஆணையர் சந்திரசேகரை நேரடியாக சந்தித்து, சம்பந்தப்பட்ட இந்த பகுதிக்கே அழைத்து வந்து ஆபத்தை விளக்கியாகி விட்டது.

உடனடியாக தரமான மூடி செய்து தருகிறோம் என வாக்குறுதி அளித்தார். அதனால் நகராட்சி நிர்வாகம் மீண்டும் உண்மையான உலகத் தரத்தில் மூடி செய்து தருவார்கள் என்கிற நம்பிக்கையில் இப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

நகராட்சியில்… மூடி ரெடியா…? 

TS 7 Lungies

You may also like

1 comment

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!