Home செய்திகள் ஒன்றிய அரசு என குறிப்பிட்டஎம்எல்ஏ ராஜன் செல்லப்பா

ஒன்றிய அரசு என குறிப்பிட்டஎம்எல்ஏ ராஜன் செல்லப்பா

by mohan

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் உறுதிமொழி ஏற்பு விழா மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு நடைபெற்றது.திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன சேர்ந்து வீரவணக்க நாள் உறுதிமொழி ஏற்றார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கூறுகையில்:இன்று திமுகவுடன் கூட்டணி இருக்கும் காங்கிரஸ் 1967இல் மாணவர்கள் போராட்டத்தில் தான் ஆட்சியை இழந்தது. இதனால் என்றும் அதிமுக காங்கிரசை சாடுவதற்கு உரிமை இருக்கிறது. எம்ஜிஆர் காலத்திலிருந்து, ஜெயலலிதா காலத்திலிருந்து, இபிஎஸ், ஓபிஎஸ் காலம் வரை அதிமுகவால் வீரவணக்க நாள் நடைபெற்று வருகிறது.டெல்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசு உறுதி அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு:ஒன்றிய அமைச்சர் இதற்கான பதிலை தமிழக முதல்வருக்கு சொல்லியுள்ளார் தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தை ஈடுபடுத்த தவறிவிட்டது என்று நினைக்கிறோம்.பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் நடந்திருப்பது தொடர்பான கேள்விக்கு:இது தொடர்பாக அதிமுக இன்று வழக்கு தொடங்கி இருக்கிறது இது சம்பந்தமான சாராம்சம் வந்து இருக்கிறது இது தொடர்பாக அதிமுகவால் இந்த ஊழல் அடையாளப்படுத்தப்படும்.நகர்ப்புற தேர்தலில் டெப்பாசிட் தொகை இரண்டு மடங்காக இருப்பது தொடர்பான கேள்விக்கு:தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு அதிமுகவை அந்த தொகையை கட்டுவதற்கு தயாராக உள்ளது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக முடிவு எடுத்துள்ளது அந்த முடிவை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை தேர்தல் எப்போது நடைபெற்றாலும், டெபாசிட் தொகையை கூட்டினாலும் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!