Home செய்திகள் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் ஸ்டிக் ஆர்டர் செய்தவருக்கு காலாவதியான சாக்லேட்டை அனுப்பி வைத்த அமேசான் நிறுவனம்

சர்க்கரை அளவை பரிசோதிக்கும் ஸ்டிக் ஆர்டர் செய்தவருக்கு காலாவதியான சாக்லேட்டை அனுப்பி வைத்த அமேசான் நிறுவனம்

by mohan

மதுரை மாவட்டம் பசுமலை ரைஸ்மில் ரோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெய் சிங் இராசையா வயது 74 இவரது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் இவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் தினசரி வீட்டிலேயே சர்க்கரை அளவை தானே பரிசு வைத்துக் கொள்வார் இதற்காக இவர் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை இவரது மகன் அமேசான் நிறுவனத்தில்ACCU-CHEK என்னும் சர்க்கரை அளவை இரத்தத்தில் காட்டும் ஸ்டிக்கை செய்து வாங்குவது வழக்கமாக வைத்துள்ளார் வழக்கம்போல் இவரது மகன் கடந்த நான்கு நாட்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து இவருக்கு சர்க்கரை அளவை சரி பார்க்கும். ACCU- U-CHEK ஸ்டிக்கை ரூபாய் 900 ஆர்டர் ஆர்டர் கொடுத்து உள்ளார்

அமேசான் நிறுவனத்தில் இருந்து காலையில் வந்த போது கையில் இருந்ததால் அப்புறமாக பிரிக்கலாம் என்று நினைத்து வைத்துவிட்டார் இந்த நிலையில் இரவு பிரிக்கும் பொழுது காலாவதியான இரண்டு சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார் இதுகுறித்து யாரிடம் முறையிடுவது என்று புரியாமல் சர்க்கரை நோயாளியான எனக்கு மேலும் சக்கரையை அனுப்பி வைத்து கொடுத்து மேலும் நோயாளியாக பார்க்கிறாயா என நினைத்து நொந்து போய் உள்ளார் ஓய்வு பெற்ற ஆசிரியர் இணையத்தில் பொருட்கள் வாங்கும் பொழுது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும் என்பதே எடுத்துக்காட்டாக உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!