கீழக்கரை அருகே கழிவுநீர் கால்வாயில் விழுந்த மாடு மீட்கப்பட்டது….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது அதை கண்ட பொதுமக்கள் மற்றும் கீழக்கரை நாசா ஆம்புலன்ஸ் சர்வீஸ் ஓட்டுனர்கள் அபுதுல்லா, பிரவீன், அபுதாஹிர் முயற்சி செய்தும் மாடை மீற்க முடியாத காரணத்தினால் கீழை ஆம்புலன்ஸ் சர்வீஸ் ஓட்டுனர்கள் ஏர்வாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் பசு மாட்டை மீட்டனர். இதேபோல் கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் வாறுகாலில் மூடி போடாமல் இருப்பதால் பல விலங்கினங்கள் உள்ளே விழும் அபாயமும்,  மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

புனித ரமலான் வாழ்த்துக்கள்..