திருமங்கலத்தில் வீட்டை உடைத்து திருடப்பட்ட 63 பவுன் சவரன் தங்க நகைகள் மீட்பு ஒருவர் கைது:

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்டியன் காலனியில், அமைந்துள்ள ஒரு வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி பட்டப்பகலில் துணிகர கொள்ளைச்சம்பவம் ஒன்று அரங்கேறியது.இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து, திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ,மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், திருமங்கலம் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதல்களின் படி ,விசாரணை மேற்கொண்டு கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற 5 நாட்களில் விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சாத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் முத்துராஜ் என்ற சுஜித் (30). என்பவர்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.இதனையடுத்து, குற்றவாளி முத்துராஜை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து பல்வேறு இடங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 63 பவுன் தங்க நகைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டது. மேலும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் குற்றவாளியிடம் விசாரணை மேற்கொண்டதில், திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஏற்கெனவே, பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய வழக்குகள்உள்ளது என, தெரியவந்துள்ளது.மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து அவரிடம் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட 63 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினரை, காவல் கண்காணிப்பாளர் வி பாஸ்கரன் வெகுவாக பாராட்டினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..