மதுரைக்கான திட்ட அறிவிப்புகள்.முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள்-எம்.பி.

இன்றைய தினம் தமிழக முதல்வர் மதுரை மாவட்டத்துக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி புதிய பல திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார். நிச்சயம் இந்த நாள் மதுரை மாவட்டத்திற்கு ஒரு சிறந்த நாள் என்றே நான் நினைக்கின்றேன். என மதுரை பாராளமன்ற உறுப்பினர் அறிக்கை வெளியீடு மேலும் அவர் கூறுகையில்      ஏறக்குறைய 319 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் இன்றைக்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையாகி இருக்கிறது இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிற செய்தி. அதுபோக புதிதாக 11 அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார் அதற்கு மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் என்னுடைய மட்டற்ற மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மதுரையினுடைய சமூக பிரச்சனைக்கு மிக முக்கியமான காரணம் வேலையின்மை. வேலையின்மைக்கு அடிப்படை காரணம் இங்கே தொழில் வளர்ச்சி அடையாதது.தொழில்வளர்ச்சித் தேவையான தொழில் பேட்டைகள் போதிய அளவில் இல்லாதது.இன்றைக்கு தமிழக முதல்வர் மதுரையில் உடனடியாக தொழில்பேட்டை அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது மதுரையின் வளர்ச்சிக்கு ஆதாரமான ஒரு அறிவிப்பு. அதே போல மதுரையின் வளர்ச்சித் திட்டங்கள் என்கிற அடிப்படையில் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.அதே போல மதுரையினுடைய போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மதுரையின் நகர்ப்பகுதிகளில் செயல்படும் சந்தைகளை வெளியிலே கொண்டு செல்வதற்கு ரூ50 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.முக்கியமாக மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 பாலங்கள் மண்டேலா நகர் பாலம், விரகனூர் பாலம் அப்பல்லோ சந்திப்பு பாலம், அரசு ராஜாஜி மருத்துவமனை சந்திப்பு பாலம் என்று 4 புதிய பாலங்களுக்கான அறிவிப்பினை தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கிறார். மதுரையினுடைய போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலங்களுடைய தேவை மிக அதிகம். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மதுரையினுடைய வளர்ச்சி விகிதம் என்பது நான்கில் ஒரு பகுதி தான் என்பதை பார்த்தோம். எனவே இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டு விரைவில் துவக்கப்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறேன்.மிக முக்கியமாக மூன்று அறிவிப்புகள் .இங்கே கூடுதல் சிறப்புகளாக மதுரை வைகையினுடைய வடகரை பகுதியில் 100 கோடி ருபாய் செலவில் புறநகர் சாலை இணைப்பிற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மிக முக்கியமாக அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட சர்வதேச தரத்தோடு நவீன அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். போதுமான மருத்துவ வசதிகள் அதேபோல காளைகளுக்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்டவைகள் இடம்பெறும் ஒரு அரங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பது நம்முடைய மாவட்டத்தின் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது. அந்த திட்டத்தினை இன்றைக்கு தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.அதே போல மிக முக்கியமான இன்னொரு அறிவிப்பு மதுரையினுடைய மத்திய சிறைச்சாலை புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பது.சென்னையினுடைய மத்திய சிறைச்சாலை புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டதால் சென்னையின் மையப்பகுதியில் மிகப்பெரிய ஒரு இடம் கிடைத்தது அது மருத்துவமனைக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம். அதே போல மதுரையினுடைய சிறைச்சாலை என்பது ஆதியிலே மீனாட்சி அம்மன் கோயில் அருகில் இருந்த இராணி மங்கம்மாள் சத்திரத்தின் ஒரு பகுதியாக 1865 முதல் 1905 வரை சுமார் 40 ஆண்டு காலம் இருந்தது.

அதற்குப் பிறகுதான் இன்றைக்கு இருக்கிற பகுதிக்கு 1905 ம் ஆண்டு மாற்றினார்கள். அது புதிய சிறைச்சாலை அதனால்தான் அது நியூ ஜெயில் ரோடு என்றிருக்கிறது பழைய சிறை மீனாட்சி அம்மன் கோயில் அருகிலே உள்ளது. அன்றைக்கு மதுரை நகரத்தின் நெரிசல் அதிகமானதால் புறநகருக்கு மாற்றினார்கள். மாற்றப்பட்டு 115 ஆண்டுகள் ஆகிறது இன்றைக்கு நகரின் மையப் பகுதியில் 35 ஏக்கர் இடத்தில் அமைந்து இருக்கிறது இந்த சிறைச்சாலை. அதனை மாற்றி புறநகருக்கு கொண்டு செல்ல வேண்டும். அதில் பல்வேறு ஆலோசனைகள் இருக்கிறது நாமும் ஆலோசனைகள் சொல்லி இருக்கிறோம். எனவே முதல் கட்டமாக சிறைச்சாலையை மதுரையின் மையப்பகுதியில் இருந்து புறநகர் மாற்றப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்கள். மதுரையின் வளர்ச்சிக்கு ஒரு மையமாக அது மாற இருக்கிறது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..அதேபோல அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகளுக்கு ஏறக்குறைய 25 கோடி ரூபாயும் வீரவசந்தராயர் மண்டபத்தின் புனரமைப்புக்கு 18 கோடி ரூபாயும் அறிவித்திருக்கிறார். இந்த 11 திட்டங்களும் புதிய அறிவிப்புகளாக வந்திருக்கிறது.இந்த புதிய அறிவிப்புகள் மதுரையினுடைய வளர்ச்சிக்கு மதுரையினுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு மதுரை மக்களுடைய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பாக இருக்கிறது.இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர்கள் தோழர்கள் மா.கணேசன் மற்றும் கே.ராஜேந்திரன் மூவரும் நேரடியாக சந்தித்தோம். இருபது நிமிடங்களுக்கு மேலாக தமிழக முதல்வர் மதுரை மாவட்டத்தின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.அவர்களிடம் 23 கோரிக்கைகளை முன்வைத்தோம். இவையனைத்தையும் கேட்டு மதுரையின் வளர்ச்சிக்கு இந்த அரசு பங்களிப்பு செய்யும் என்று உறுதியளித்தார்.முதல்வரின் இன்றைய அறிவிப்பில் ஏழு கோரிக்கைகள் இடம்பெற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி. தமிழக முதல்வர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார் …

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..