Home செய்திகள்உலக செய்திகள் ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கையை ஆழமாக ஆய்வு செய்த இந்தியாவின் கருந்துளை மனிதர் சி.வி.விசுவேசுவரா நினைவு தினம் இன்று (ஜனவரி 16, 2017).

ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கையை ஆழமாக ஆய்வு செய்த இந்தியாவின் கருந்துளை மனிதர் சி.வி.விசுவேசுவரா நினைவு தினம் இன்று (ஜனவரி 16, 2017).

by mohan

சி. வி. விசுவேசுவரா (C.V. Vishveshwara) மார்ச் 6, 1938ல் பெங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பத்மசிறீ சி.வி.வெங்கடராமையா ஒரு கல்வியாளர். விசுவேசுவரா சிறுவராக இருக்கும்போது இலக்கியம் இசை ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அணுத் துகள் இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற சி.வி.விசுவேசுவரா, மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் கருந்துளைகள் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். நியூயார்க்கு பல்கலைக்கழகம், பாசுடன் பல்கலைக்கழகம், பிட்சுபர்க் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கற்பிக்கும் துறையில் பணி செய்தார். பின்னர் சொந்த ஊரான பெங்களூருவுக்குத் திரும்பினார். கடந்த 1970 ஆம் ஆண்டு ‘கருந்துளை வடிவம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.கருந்துளைகளின் கட்டமைப்பை விண்வெளி நேர சமச்சீர்களைப் பயன்படுத்தி முதன்முதலில் பகுப்பாய்வு செய்தார். இதைத் தொடர்ந்து 130 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ராட்சதக் கருந்துளைகள், ஒன்றை யொன்று சுற்றிக்கொண்டே மோதியபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகளின் வடிவத்தை வரைந்தார். கருந்துளை அதிர்வுகளின் இந்த முறைகள் ஈர்ப்பு அலை கண்டுபிடிப்பாளர்களைப் பயன்படுத்தி அவதானிப்பதற்கான முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். பிற்காலத்தில், அவர் கருந்துளை இயற்பியலின் ஒரு முக்கிய அம்சமான அண்டவியல் பின்னணியில் உள்ள கருந்துளைகளை ஆராய்ந்தார். ஐன்ஸ்டீனின் புலம் சமன்பாடுகளின் சரியான தீர்வுகள், ஈர்ப்பு சரிவு, சிறிய நட்சத்திர பொருள்கள், நிலைமாற்ற சக்திகள் மற்றும் விண்வெளி நேரக் குழப்பங்கள் போன்ற பொது சார்பியல் தொடர்பான பிற பகுதிகளுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.பெங்களூருவில் கோளரங்கத்தைத் தோற்றுவித்து அதன் இயக்குநராக இருந்தார். கோளரங்கு நிகழ்ச்சிகளை எழுதியும் நிகழ்ச்சிகளை இயக்கியும் செயல்பட்டார். இரண்டு அறிவியல் குறும்படங்களை உருவாக்கினார். ஐன்சுடீன் கருந்துளைகள் பற்றி சில நூல்களும் பல கட்டுரைகளும் (Einstein’s Enigma or Black Holes in My Bubble Bath) எழுதினார். இந்தியாவின் ‘கருந் துளை மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கையை ஆழமாக ஆய்வு செய்த சி.வி.விசுவேசுவரா ஜனவரி 16, 2017ல் தனது 78வது அகவையில் பெங்களூரில்இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!