Home செய்திகள் தீவில் தத்தளித்த மீனவர்;கடலோரக் காவல் படை மீட்பு.

தீவில் தத்தளித்த மீனவர்;கடலோரக் காவல் படை மீட்பு.

by mohan

இராமநாதபுரம் மாவட்டம்மன்னார் வளைகுடா தீவு பகுதியில் தத்தளித்த விசைப்படகு மீனவர் 4 பேரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர். மன்னார் வளைகுடா கடலில்முயல் தீவு பகுதியில் பாம்பன் கலங்கரை விளக்கம் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் விசைப்படகு இன்ஜின் பழுதாகி மண்டபம் அருகே வேதானா மீனவர் 4 பேர் தத்தளிப்பதாக இந்திய கடலோரக் காவல் படை சென்னை தலைமையகத்திற்கு ஜனவரி 10 ஆம் தேதி மாலை 4:20 மணிக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் முகாமிற்கு சொந்தமான ஹோவர்கிராப்ட் வீரர்கள், முயல் தீவு பகுதியில் 6 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நடுக்கடல் படகில் தத்தளித்த மீனவர் 4 பேரை மீட்டனர். அவர்களுக்கு முதலுதவி, உணவு, குடிநீர் அளித்தனர். பழுதான படகை மற்றொரு விசைப்படகு மூலம் இழுத்து வர அறிவுறுத்தப்பட்டது. மீட்கப்பட்ட மீனவர் 4 பேரும், ஹோவர்கிராப்ட் மூலம் மண்டபம் இந்திய கடலோரக் காவல் முகாம் கொண்டுவரப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு பின் மெரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!