Home செய்திகள் விக்கிரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை தடுத்த பொதுமக்கள் மூன்றாவது முறையாக திரும்பி சென்ற அதிகாரிகள்.

விக்கிரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை தடுத்த பொதுமக்கள் மூன்றாவது முறையாக திரும்பி சென்ற அதிகாரிகள்.

by mohan

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழப் பெருமாள் பட்டி கிராமத்தில் விவசாய பாதைக்கு இடைஞ்சலாக உள்ள பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டிய வீட்டின் படிக்கட்டுகளை அகற்ற சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் அங்கு ஜேசிபி வாகனத்துடன் காவல்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் செய்வதறியாது திகைத்து நின்றனர் பின்பு மற்றொரு நாளில் அகற்றலாம் என்று எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சென்றுவிட்டனர்.இது சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடுத்த மகாராசன் கூறும்போது ஆக்கிரமிப்பை அகற்ற பல்வேறு மனு கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை இதனால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உத்தரவு வாங்கி வந்து அகற்ற காத்திருந்த வேளையில் பொதுமக்கள் என்ற போர்வையில் சிலரின் மிரட்டலுக்கு பயந்து அதிகாரிகள் சென்றது மிகுந்த கவலை தருவதாக தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் இது போன்று மூன்று முறை ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சி எடுத்தும் அகற்ற முடியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார் இதனால் விவசாய விலை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு அரசு மறைமுகமாக ஆதரவு தருகிறதோ என்ற ஐயம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார் ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து உள்ளவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாய விளை பொருளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்இதுகுறித்து பொது பாதையை ஆக்கிரமித்து தாக கூறப்படும் பெண் கூறும்போதுபத்திர படி சரியாக வீடு கட்டி இருப்பதாகவும் அரசு உத்தரவு போட்டுள்ளது என்று ஏதோ காரணம் சொல்லி படியை இடிக்க வருவதாகவும் பாதையை ஆக்கிரமித்து கட்டவில்லை என்றும் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருக்கும் வாசல் படியால் பொது பாதைக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லை என்றும் தெரிவித்தார்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!