Home செய்திகள் 10 வயது சிறுமியின் சிலம்ப சாதனை “நோபல் புக் ஆப் ரெக்கார்டில் “இடம்பெற்றது.

10 வயது சிறுமியின் சிலம்ப சாதனை “நோபல் புக் ஆப் ரெக்கார்டில் “இடம்பெற்றது.

by mohan

பல்கலைகழகத்தில் 10 வயது சிறுமியின் சிலம்பச் சாதனை நிகழ்வு நடைபெற்றது.பத்து வயதில் பன்னிரெண்டு (12) பதக்கங்கள் மற்றும் உலக சாதனை. சாதனை சிறுமி ஹரிணி மதுரை காமராசர் பல்கலைக்கழகத் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவத்தின் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர். மேஷாக் பொன்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தமிழியல் துறைத் தலைவரும், தமிழ்ப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவத்தின் இயக்குநர் (பொ) முனைவர் சத்தி யமூர்த்தி ஒருங்கிணைப்பில், துணைபதிவாளர் மீனாட்சிசுந்தரம், நோபல் புக் ஆஃப் ரெக்கார்டு நிறுவனத்தின் சார்பாளர்.கௌதம் முன்னிலையில் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை சோம சுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணப்பாண்டியன்-ரேவதி தம்பதியினர். இவர்களது மகள் ஹரிணி (வயது10)கடந்த 6 வயது முதலே சிலம்பம் பயின்று மாநில அளவில் பல்வேறு பதக்கங்கள் பெற்றுளார்.தற்போது “நோபல் புக் ஆப் ரெக்கார்டு” சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கு அந்நிறுவனத்தால் தேர்வு செய்யபட்டுள்ளார். பத்துவயதில் 10 நிமிட’ம் 10 நொடிகளில் சிலம்பக் கலையில் 32 தற்காப்பு முறைகளை பயன்படுத்தி சாதனை புரிந்துள்ளார்.சமுகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு முறையை கருத்தில் கொண்டு தற்காப்பு முறையை பயன்படுத்தி பாலியல் தொல்லை , மற்றும் சமுக விரோதிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும். தன்னம்பிக்கையளிக்கும் சிலம்ப பயற்சி உதவுவதாக சிறுமி ஹரிணி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!