Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் 11.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்:ஆட்சியர் தகவல்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 11.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்:ஆட்சியர் தகவல்.

by mohan

இராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் சுருக்கத் திருத்தம்-2022 அடிப்படையில் தயாரான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்வெளியிட்டார் .அவர் தெரிவித்ததாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொண்ட வாக்காளர் சுருக்கத் திருத்தம் 2022 பணிகளின் அடிப்படையில இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளில் 5,82,017 ஆண், 5,89,966 பெண், மூன்றாம் பாலின வாக்காளர் 68 பேர் 11 லட்சத்து 72 ஆயிரத்து 51 வாக்காளர் உள்ளனர். 2021 நவ.1ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 5,77,750 ஆண், 5,84,047 பெண், மூன்றாம் பாலின வாக்காளர்க 62 பேர் என 11,61,859 வாக்காளர் இருந்தனர்.2021 நவ.1க்குப் பின் பெறப்பட்ட மனுக்கள் படி 6,746 ஆண், 8,198 பெண், மூன்றாம் பாலின வாக்காளர் 7 பேர் என 14,951 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே காலத்தில் பெறப்பட்ட மனுக்கள் படி 2,479 ஆண், 2,279 பெண், மூன்றாம் பாலின வாக்காளர் ஒருவர் என 4,759 வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி(தனி) சட்டமன்ற தொகுதியில்1,26,689 ஆண்,1,29,786 பெண், 3 ஆம் பாலினத்தவர்22 பேர் என2,56,497 வாக்காளர்கள் உள்ளனர். திருவாடானை சட்டமன்ற தொகுதியில்1,46,333 ஆண்,1,46,882 பெண், 3 ஆம் பாலினத்தவர்22 பேர் என2,93,237 வாக்காளர்கள் உள்ளனர். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி1,54,246 ஆண்,1,57,746 பெண், 3 ஆம் பாலினத்தவர்20 பேர் என3,12,012 வாக்காளர்கள் உள்ளனர்.முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி1,54,749 ஆண்,1,55,552 பெண், 3 ஆம் பாலினத்தவர்4 பேர் என3,10,305 வாக்காளர்கள் உள்ளனர். 4 தொகுதிகளில் 5,82,017 ஆண், 5,89,966 பெண், 3 ஆம் பாலினத்தவர் 68 பேர் என 11,72,051 வாக்காளர்கள் உள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியல் வாக்குப் பதிவு அலுவலர்களின் (வருவாய் கோட்டாட்சியர், ராமநாதபுரம், பரமக்குடி) அலுவலகங்கள் உதவி வாக்கு பதிவு அலுவலர்களின் (அனைத்து வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர், ராமநாதபுரம், பரமக்குடி) அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வமான இணையதளமானwww.elections.tn.gov.in மற்றும் www.nvsp.inல் மக்கள் அனைவரும் சரிபார்த்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன், வருவாய் கோட்டாட்சிர்கள் எம்.ஷேக் மன்சூர் (ராமநாதபுரம்), ரா.முருகன் (பரமக்குடி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரா.பழனிகுமார், தனிவட்டாட்சியர் (தேர்தல்) பொன். கார்த்திகேயன் உட்பட அரசு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துக கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!