Home செய்திகள் ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்கும் பணி தொடக்கம்.

ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்கும் பணி தொடக்கம்.

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடந்த விழாவில் மாவட்டத்தில் உள்ள 3,89,784 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளைஅமைச்சர் ராஜகண்ணப்பன்துவக்கி வைத்தார்.அமைச்சர் தெரிவித்தாவது:பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுதுவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட அளவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.ராமநாதபுரம் மாவட்டத்தில் 558 முழு நேர , 217 பகுதி நேர கடைகள் என 775 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் அரிசி அட்டை – 346854, ஏஏஒய் அரிசி அட்டை – 39615, காவலர் அட்டை – 1223, ஓஏபி மற்றும் ஏஎன்பி அட்டை – 1643, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் – 449 என 3,89,784 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.பச்சரிசி – 1கி, வெல்லம் – 1கி, முந்திரி – 50 கிராம், திராட்சை – 50 கிராம், ஏலக்காய் – 10 கிராம், பாசிப்பருப்பு – 500 கிராம், நெய் – 100 கிராம், மஞ்சள் தூள் – 100 கிராம், மிளகாய் தூள் – 100 கிராம், மல்லித் தூள் – 100 கிராம், கடுகு – கிராம், சீரகம் – 100 கிராம், மிளகு – 50 கிராம், புளி – 200 கிராம், கடலைப் பருப்பு – 250 கிராம், உளுந்தம் பருப்பு – 500 கிராம், ரவை – 1கி, கோதுமை மாவு – 1கி, உப்பு – 500 கிராம், துணிப்பை – 1, முழு நீள கரும்பு – 1 உள்ளிட்ட பொருட்கள்பொங்கல் பரிசு தொகுப்பில்அடங்கியுள்ளன.கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தினமும் 150 முதல் 200 குடும்ப அட்டைதார்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கும் வகையில் பரிசுத்தொகுப்பு வழங்கும் நாள், நேரம் குறித்த விவரம் அடங்கிய டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அரசு, மக்கள் நலன் திட்டங்களை செயல்படுத்தும் அரசாக செயல்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி), கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத், மாவட்ட ஊராட்சி தலைவர் உ.திசைவீரன், பரமக்குடி வருவாய் கோட்டாச்சியர் இரா.முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் க.மரகதநாதன், செய்தி மக்கள தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!