Home செய்திகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதனை செய்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதனை செய்தனர்.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல்நாள் “தை.பொங்கலன்று ” ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம்.இதனைத்தொடர்ந்து பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதித்து சான்றிதழ் அளித்த பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்படும்..இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் தகுதி பரிசோதனை திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.கால்நடை மருத்துவர் சிவக்குமார்தலைமையில், கால்நடை ஆய்வாளர் உள்பட 7 பேர் கொண்ட கால்நடைத்துறை குழுவினர் சார்பில் மாட்டின் உயரம் ,கொம்பு சீவி இருத்தல் கூடாது, கொம்பு இடைவெளி, திமில் ,மாட்டின் கண் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு உடல்தகுதி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது.’இந்தாண்டு நாட்டு மாட்டு இனங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறவேண்டும் என்ற அடிப்படையில் பல சோதனைகள் நடைபெற்றகால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான உயரம் 120 சென்டி மீட்டர் ,கொம்பு கூர்மையாக இருக்க கூடாது, கண்பார்வை, கொம்பு இடைவெளி, உடற்தகுதி போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது.மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கு பெற வேண்டும் என விதி முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனடிப்படையில்மாட்டின் புகைப்படம், மாட்டின் உரிமையாளர் ஆதார்கார்டு போன்றவை சரிபார்க்கப்பட்டுஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டனஇதனை தொடர்ந்து கால்நடைத்துறை சார்பில் பரிசோதனை செய்தபின் சான்றிதழ் வழங்கப்பட்டது.சான்றிதழ் வழங்கப்பட்ட மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் ஜனவரி 14ம் தேதி அன்று மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!